மாஸ்டர் படத்தில் நடித்தது குறித்து மனம் திறந்த கௌரி கிஷன் - வீடியோ!

செவ்வாய், 3 மார்ச் 2020 (13:58 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் ’மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மாணவராக சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.
 
மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான குட்டி கதை சிங்கிள் பாடல் தற்போது வரை 26 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறார்.
 
கடந்த சில நாட்களாகவே நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நேற்று நிறைவடைந்தது. இந்நிலையில் தற்ப்போது மாஸ்டர் படத்தில் நடித்தது குறித்து நடிகை கௌரி கிஷன் தந்து ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாஸ்டர் படத்தில் நடித்தது நல்ல அனுபவம், இந்த தருணம் மிகுந்த நெகிழ்ச்சியாக உள்ளது. மேலும் தொடர்ந்து இது போன்ற நல்ல படங்கள் எனக்கு கிடைக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார். 

Actress @Gourayy Shares Her Amazing Experience On Working In The Sets Of #Master! ❤️ @MasterFilmOff pic.twitter.com/RqOEAL4IPS

— #MASTER (@MasterFilmOff) March 2, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்