அமெரிக்கா செல்லும் செல்வராகவன், சந்தானம்

வெள்ளி, 9 டிசம்பர் 2016 (09:56 IST)
புதிய படத்துக்காக செல்வராகவன் மற்றும் சந்தானம் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளனர்.

 
நெஞ்சம் மறப்பதில்லை படத்தை முடித்த செல்வராகவன், சந்தானம் நடிக்கும் படத்தை தொடங்கியுள்ளார். யுவன் இசையமைக்கும் இந்தப் படம், காதல் படமாக தயாராகிறது.
 
ஹைதராபாத், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். முக்கியமான சில காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளன. இதற்காக செல்வராகவன், சந்தானம் உள்ளிட்ட படக்குழு அமெரிக்கா செல்லவுள்ளது.
 
ஒரேகட்டமாக படப்பிடிப்பை முடித்து கோடையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்