ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ரிலீஸ் ஆகும் விஜய்யின் GOAT திரைப்படம்!

vinoth

வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (07:38 IST)
இந்த ஆண்டில் வெளியாகவுள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக உருவாகி வருகிறது விஜய்யின் GOAT திரைப்படம். இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் சேட்டிலைட் உரிமயை ஜி நிறுவனமும், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் வட இந்திய மொழிகளுக்கான ரிலீஸ் உரிமையை ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு வெளியிட்ட அப்டேட்டின் படி “GOAT” திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவலாக அமைந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்