விஜய்யின் கோட் திரைப்படத்தின் தமிழக வசூல் நிலவரம் என்ன?

vinoth

திங்கள், 16 செப்டம்பர் 2024 (15:37 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் செப்டம்பர் 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் கோட் திரைப்படம் உருவானது.

ரிலீஸுக்குப் பின்னர் படம் கலவையான விமர்சனங்களைப் பெற தொடங்கியது. ஆனாலும் வசூலில் குறை வைக்கவில்லை.. படம் இதுவரை 300 கோடி ரூபாய்க்கு மேல் உலகளவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் அஜித், ரஜினி, சூர்யா மற்றும் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களின் ரெஃப்ரன்ஸ்களை அமைத்திருந்தார் இயக்குனர் வெங்கட்பிரபு. அதுபோல சிவகார்த்திகேயன் மற்றும் த்ரிஷா போன்றோரின் கேமியோக்களும் ரசிகர்களை கவர்ந்தன.

இந்த படத்துக்கு தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் கிடைத்த அளவுக்கு இந்தியாவின் பிற மாநிலங்களில் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் இப்போது வரை கணிசமான ரசிகர் கூட்டத்தோடு இந்த படம் ஓடி வருகிறது. இந்நிலையில் ரிலீஸாகி 12 நாட்களில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. டிக்கெட் விலை கூட்டி விற்கப்பட்டதும் இந்த வசூலுக்கு ஒரு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்