கோட் படத்தின் டெலிடட் காட்சிகள் ரிலீஸுக்குப் பின்னர் வெளியிடப்படும்… வெங்கட்பிரபு தகவல்!

vinoth

புதன், 4 செப்டம்பர் 2024 (11:18 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக பரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. சமீபத்தில் படம் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றது. படத்தின் ஓடும் நேரம் 3 மணிநேரம் 3 நிமிடம் என தெரியவந்துள்ளது. நாளை மறுநாள் படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் படக்குழுவினர்.

இந்நிலையில் படத்தில் இருந்து நீக்கப்பட்ட 18 நிமிடக் காட்சிகள் பட ரிலீஸான பின்னர் சமூகவலைதளங்களில் ரிலீஸ் செய்யப்படும் எனக் கூறியுள்ளார். மேலும் படம் ஓடிடியில் ரிலீஸாகும் போது அந்த காட்சிகள் இணைத்து வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்