சமீபத்தில் அஜித் நடித்து வரும் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் சென்றார். அஜித்துடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்த ஜிப்ரான், விரைவில் தனது படத்தில் தனக்கு இசையமைக்க வாய்ப்பு தருவதாக உறுதி அளித்ததையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று ஜிப்ரான் தனது டுவிட்டர் பக்கத்தில் அதே படப்பிடிப்பு தளத்தில் வித்யாபாலனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் தலைசிறந்த நடிகையான வித்யாபாலனுடன் புகைப்படம் எடுத்து கொண்டதில் மகிழ்ச்சி என்று தெரிவித்த ஜிப்ரான், அதே நேரத்தில் இந்த புகைப்படத்தை எடுக்கும்போது கேமிராமேன் பக்கத்தில் அஜித் இருந்ததால் என்னால் சரியாக போஸ் கொடுக்க முடியவில்லை என்றும், என் கண்களை அஜித்தையே பார்த்து கொண்டிருந்தது' என்று கூறியுள்ளார்.