அஜித்தின் "நேர்கொண்ட பார்வை" படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது !

புதன், 3 ஏப்ரல் 2019 (15:05 IST)
நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

தமிழ் சினிமாவின் தலையாய  நடிகர் அஜித் எச். வினோத் இயக்கும் ‘நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் கடந்து ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்' படத்தின் ரீமேக். 
 
இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்திஇல் அஜித்திற்கு ஜோடியாக முதன் முறையாக தமிழில் வித்யா பாலன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடித்துள்ளனர். 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் , இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது எனவும் , அடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழு தீவிரம் கட்டிவருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.மேலும் அஜித் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியில் ஈடுபட உள்ளதாகவும் கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்  நடிகை வித்யா பாலன் ''தனது முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள போனி கபூருக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் தெரிவித்து  இந்த சிறப்பான ஒன்றில் நானும் சிறிய பங்காற்றியுள்ளேன்'' என நெகிழ்ச்சியாக  தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்