அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் – துணிவு படம் சம்மந்தமாக ஜிப்ரான் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

செவ்வாய், 24 ஜனவரி 2023 (09:32 IST)
சமீபத்தில் வெளியான அஜித்- வினோத் கூட்டணியின் துணிவு திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் ஜிப்ரானின் பின்னணி இசையும் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. இந்நிலையில் இப்போது படம் ரிலீஸ் ஆகி 14 நாட்கள் கடந்துள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த மற்றும் இடம் பெறாத 33 இசைக் கோர்வை துண்டுகளை விரைவில் ரிலீஸ் செய்ய உள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் அறிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்