10 வருடத்துக்குப் பிறகு பாலிவுட்டில் படம் இயக்கும் கௌதம் மேனன்… ஹீரோ இவரா?

செவ்வாய், 7 மார்ச் 2023 (10:03 IST)
பிரபல இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான படம் “வெந்து தணிந்தது காடு”. அந்த படம் திரையரங்க ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனாலும் அந்த படம் மற்ற பிஸ்னஸ்களின் மூலம் வருவாய் ஈட்டிக்கொண்டது. இந்நிலையில் இப்போது கௌதம் மேனன் நடிப்பிலு கவனம் செலுத்தி வருவதால்,  அடுத்த படம் என்ன என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கான ஏக் தீவானா தா படத்துக்குப் பிறகு 10 ஆண்டுகள் கழித்து அவர் ஒரு இந்தி படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் காவல்துறை பற்றிய படமாக உருவாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்