லியோ ஷூட்டிங்கில் இணைய உள்ள அர்ஜுன்… கௌதம் மேனன் ஷூட்டிங் ஓவர்!

ஞாயிறு, 5 மார்ச் 2023 (08:11 IST)
விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது இந்த படத்தின் டைட்டில் வீடியோ வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இந்நிலையில் இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு மோசமான வானிலை காரணமாக மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், ஏற்கனவே மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரின் காட்சிகளைப் படமாக்கி முடித்து உள்ளார் இயக்குனர் லோகேஷ். இதையடுத்து அர்ஜுன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அர்ஜுன் விரைவில் காஷ்மீர் செல்ல உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்