வெயிலில் விக்ரமை வாட்டியெடுத்த கெளதம் மேனன்

செவ்வாய், 11 ஜூலை 2017 (11:00 IST)
கெளதம் மேனன் இயக்கிவரும் ‘துருவ நட்சத்திரம்’ ஷூட்டிங், கடுமையான வெயிலில் பாலைவனத்தில் நடைபெற்றுள்ளது.


 

 
விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிவரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. அமெரிக்காவின் நியூயார்க், குன்னூர், சென்னை ஆகிய இடங்களில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, அடுத்த ஷெட்யூலுக்காக ஐரோப்பா சென்றது படக்குழு. இந்தக் குழுவில் விக்ரமுடன் ரா.பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
 
ஸ்லோவேனியா, பல்கேரியா, துருக்கி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் ஷூட்டிங் செய்த படக்குழுவினர், கடைசியாக அபுதாபியில் ஷெட்யூலை நிறைவு செய்துள்ளனர். அங்கு, கொதிக்கும் வெயிலில் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. 55 டிகிரி வெயிலில் பணியாற்றியதாக கெளதம் மேனன் மற்றும் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இருவரும் தங்கள் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்