அந்த மாதிரி விளம்பரங்களில் நடிக்க மறுத்தேன் - ஜி வி பிரகாஷ் கருத்து!

vinoth

சனி, 10 பிப்ரவரி 2024 (08:28 IST)
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர், ஜெயில், டார்லிங், அடியே, பேச்சிலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதுடன் முன்னணி நடிகர்களில் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.  சூர்யாவின் அடுத்த படத்துக்கு இசையமைப்பதன் மூலம் 100 படங்களைக் கடந்துள்ளார். நடிகராகவும் 25 படங்களை தொட்டுள்ளார்.

இந்த நிலையில்,  ஜிவி.பிரகாஷ்குமார்  நடிக்கும் ரிபெல் படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் சினிமா துறையில் வாய்ப்பு தேடும் கலைஞர்களுக்கான ஒரு ப்ளாட்பார்மாக உருவாகியுள்ள ஸ்டார்டா அறிமுக விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர் “என்னிடம் கூல் ட்ரிங்ஸ் மற்றும் சுதாட்ட விளம்பரங்களில் கோடி ரூபாய் சம்பளத்தோடு நடிக்க அணுகினர். ஆனால் நான் அதில் நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால் பேட்மிண்ட்டன் போன்ற விளையாட்டுகளுக்கு நான் தூதுவராக இருந்துள்ளேன்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்