நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னால் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த நிலையில் அவரது கட்சி குறித்து திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சி பிரமுகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
அதற்கு பதிலளித்த அமித்ஷா, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வருவதற்கு உரிமை உள்ளது என்று கூறியதோடு ஆனால் அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்கள் தான் யாரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்