இன்று இரவு 12 முதல் ஓடிடியில் ‘கர்ணன்’: ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

வியாழன், 13 மே 2021 (21:44 IST)
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘கர்ணன்’. இந்த திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே திடீரென திரையரங்குகளும் மூடப்பட்டதால் இந்த படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் நாளை முதல் அதாவது மே 14-ஆம் தேதி முதல் ‘கர்ணன்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து இன்று நள்ளிரவு 12 மணிமுதல் இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதை அடுத்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இந்த படத்தை ஓடிடியில் பார்க்க காத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
திரையரங்குகளில் போலவே ஓடிடியிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தனுஷ் நடித்து வரும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் அவர் வெகு விரைவில் சென்னை திரும்புவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்