பிக்பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் சூடு பிடிக்க வைக்க தினம் புது புது டாஸ்க்குகளையும், திட்டங்களையும் தீட்டி வருகிறது. இதில் இந்த வாரம் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்காக ஃப்ரீஸ்-ரிலீஸ் விளையாட்டு விளையாடி வருகிறார்கள்.
ஆனால் ஃப்ரீஸ் செய்யப்பட்ட வையாபுரியால் தனது மனைவியை திரும்பி கூட பார்க்க முடியவில்லை. வந்தவர் யார் என அனைவரும் பார்க்க ஆனந்தி நீங்கள் போகலாம் என்ற பிக்பாஸ் குரல் ஒலிக்கிறது. அவர் வெளியேற வையாபுரி இறுதியாக, என் பொண்டாட்டி, என் பொண்டாட்டி என்று கத்துவதோடு வீடியோ முடிவடைகிறது.