கமல்ஹாசனை அழைத்து வா! நக்மாவுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கா?

திங்கள், 4 செப்டம்பர் 2017 (22:13 IST)
கமல் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால் அடுத்ததாக அவரை தங்கள் பக்கம் இழுக்க ஒருசில கட்சிகள் இப்போதே தூண்டில் போட ஆரம்பித்துவிட்டன. திமுக ஏற்கனவே 'முரசொலி' விழா மூலம் தூண்டில் போட்டிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியும் தன்னால் முடிந்த அளவுக்கு பெரிய வலையை விரித்துள்ளது.



 
 
கமல் நிச்சயம் அதிமுகவுக்கு, பாஜகவுக்கு போக மாட்டார். அதுமட்டுமின்றி தனிக்கட்சியும் ஆரம்பிக்க மாட்டார் என்றே தெரிகிறது. தனிக்கட்சி ஆரம்பிக்க எவ்வளவு பணம் வேண்டும் என்பதும் தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கின்றது என்பதும் அவருக்கு தெரியும்.
 
இந்த நிலையில் அவருக்கு இருக்கும் வாய்ப்புகள் திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட். கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிக வாய்ப்பு இருந்தாலும் பண விஷயத்தில் அவரைப் போல் தான் கம்யூனிஸ்ட் கட்சியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்கள் திமுக மீது இருக்கும் வெறுப்பை இன்னும் மறக்காததால் அனேகமாக காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு கமலுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் கமல்ஹாசனை எப்படியாவது தங்கள் கட்சிக்கு அழைத்து வாருங்கள் என ராகுல்காந்தி தமிழக காங்கிரஸூக்கு ரகசிய டாஸ்க் கொடுத்திருப்பதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது. இதன் அடிப்படையில் தான் நக்மா கமல்ஹாசனை இன்று சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்