விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள்

செவ்வாய், 12 டிசம்பர் 2023 (15:15 IST)
சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகின்ற 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளதாவது:

‘’தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க சென்னை மக்களுக்கு மருத்துவ முகாம்கள். மிக்ஜாம் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகின்ற 14.12.2023 அன்று காலை 8.05 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.

வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்க உள்ள இம்மருத்துவ முகாம்கள் வழியாக குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்களின் நலன் காக்கும் இம்மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்:

வடசென்னை மாவட்டம்

1.வார்டு - 46
முகவரி : முல்லை நகர், அசோக் பில்லர்,
அரசு உயர் நிலை பள்ளி அருகில்
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி

2.வார்டு - 45
முகவரி : P.B. ரோடு, கரிமேடு, வியாசார்பாடி,
தீயனைப்பு நிலையம் அருகில்
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி

3.வார்டு - 35
முகவரி: கொடுங்கையூர், முத்தமிழ் நகர், பள்ளிவாசல்அருகில்.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி

4. வார்டு 72
முகவரி: 9, கஸ்தூரிபாய் காலனி
A பிளாக், கண்ணிகாபுரம்,
மக்கள் மறுமலர்ச்சி மன்றம் அருகில்
திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதி

5. வார்டு - 75
முகவரி: சுப்புராயம் 4-வது தெரு,
திரு.வி.க.நகர் தொகுதி

6. வார்டு. 65
முகவரி: முத்துமாரியம்மன் கோவில் தெரு
MGR நகர் SBI அருகில்
கொளத்தூர் தொகுதி

7. வார்டு 41
முகவரி: கருமாரியம்மன் தெரு
தூய இருதய மெட்ரிகுலேஷன் பள்ளி அருகில்
கொருக்கு பேட்டை
R.K. நகர் தொகுதி

தென்சென்னை மாவட்டம்

8. வட்டம் -141
முகவரி: காமராஜ் காலனி
(தி.நகர் பேருந்து நிலையம் அருகில்)
தி. நகர் தொகுதி

9. வட்டம்-133
முகவரி: ஆனந்தன் தெரு
(முப்பத்தம்மா கோவில் அருகில்)
தி. நகர் தொகுதி

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்