மகேஷ் பாபுவுக்காக தெலுங்கில் பாடல் எழுதிய மதன் கார்க்கி

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (17:04 IST)
மகேஷ் பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’ படத்திற்காக, தெலுங்கில் ஒரு பாடலை எழுதியுள்ளார் மதன் கார்க்கி.

 
 
கவிஞர் வைரமுத்துவின் மூத்த மகனான மதன் கார்க்கி, பாடலாசிரியராக சினிமாவில் அறிமுகமானவர். தமிழ் மட்டுமின்றி  ஆங்கிலத்திலும் புலமை பெற்ற இவர், படத்திற்கு வசனங்களும் எழுதி வருகிறார். ‘எந்திரன்’ மூலம் வெளிச்சம் பெற்ற இவர்,  ‘எந்திரன்’, ‘நண்பன்’, ‘பாகுபலி’ இரண்டு பாகங்கள் உள்பட பல படங்களுக்கும் வசனம் எழுதியிருக்கிறார்.
 
இதுவரை தமிழில் மட்டுமே பாடல்கள் எழுதிவந்த மதன் கார்க்கி, முதன்முறையாக தெலுங்கில் ஒரு பாடலை  எழுதியிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’ படத்துக்காக இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்