ஷாருக்கானுடன் நடத்து மகிழ்ச்சியில் இருக்கும் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், பெரிய நடிகர்கள் படங்களில் நான் நடிக்க முடியாது என்று கேலி பேசியவர்களை இப்போது நினைத்து பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தி படவுலகில் எனக்கு எதிராக நிறைய வதந்திகள் பரப்பப்பட்டன. நீலப்படத்தில் நடித்து இருக்கிறேன் என்று என்னை பலரும் வெறுப்பாகவே பார்த்தனர். இந்தி பட உலகில் அதிக நாட்கள் நீடிக்க முடியாது, இன்னும் 2 மாதங்கள்தான் இங்கு இருப்பார் அதன்பிறகு பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு அவர் நாட்டுக்கே திரும்பி விடுவார் என்றனர்.