மயிலாட்டம், சிலம்பாட்டம், தார தப்பட்டை... தங்கை திருமணத்தை தடபுடலாக நடத்திய செந்தில் கணேஷ்!

திங்கள், 28 ஜூன் 2021 (08:37 IST)
பல வித்யாசமான நாட்டுப்புற பாடல்களை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடியதன்  மூலம் பட்டிதொட்டி எங்கும் பெரும் பிரபலமடைந்த செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியர்ககளுக்கு அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சினிமாவில் பின்னணி பாடகருக்கான வாய்ப்பு பெரிய அளவில் கிடைத்தது. 
 
சூப்பர் சிங்கர் டைட்டில் கார்டை வென்றதும் செந்திலுக்கு எக்கச்சக்க சினிமா படங்களில் பாடல் பாடி வருகிறார். செந்தில் கணேஷுக்கு ஒரு தங்கை இருக்கிறார். அவருக்கு அண்மையில் தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் தங்கையின் திருமணத்தில் மயிலாட்டம், சிலம்பாட்டம், தார தப்பட்டை என பல கிராமிய கலைகள் அரங்கேற தங்கையின் திருமணத்தை தடபுடலாக நடத்தியிருக்கிறார் செந்தில். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்