ராஜலட்சுமி அளித்த புகார்: உதயநிதி மீது 4 பிரிவுகளில் வழக்கு!

செவ்வாய், 12 ஜனவரி 2021 (17:51 IST)
அதிமுக பிரமுகர் ராஜலட்சுமி என்ற வழக்கறிஞர் அளித்த புகாரின் அடிப்படையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சமீபத்தில் நடைபெற்ற திமுக தேர்தல் கூட்டம் ஒன்றில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் சசிகலா குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டி வழக்கறிஞர் ராஜலட்சுமி என்ற அதிமுக பிரமுகர் காவல்துறை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்
 
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரித்து வருவதாக தெரிகிறது. மேலும் இந்த புகாரில் அவர் உதயநிதியின் வீடியோ காட்சியையும் அளித்திருப்பதாக தெரிகிறது. அந்த வீடியோவில் வழக்கு பதிவு செய்யும் ஆதாரங்கள் இருப்பதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு இருப்பதால் அதை தடுத்து நிறுத்தும் வகையில் அதிமுக இவ்வாறு செயல்படுவதாக திமுகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்