சூப்பர் ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வெள்ளி, 11 டிசம்பர் 2020 (17:00 IST)
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்துவரும் த்ரிஷ்யம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் புரோமோ வரும் 25 ஆம் தேதி கிருஸ்துமஸ் பண்டிகையொட்டி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜீத்துஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான திரைப்படம் ’த்ரிஷ்யம். இந்த திரைப்படம் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இந்த படத்தின் ரீமேக்கில் கமல்ஹாசன் கவுதமி நடித்து இருந்தனர் என்பதும் இந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ’த்ரிஷ்யம் 2’ படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானதை அடுத்து லாக்டவுன் முடிந்த உடன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கினாலும் மோகன்லால் மற்றும் மீனா கலந்து கொள்ளவில்லை என்றும் அவர்கள் விரைவில் கலந்து கொள்வார்கள் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து புறப்பட்டது

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தொடுபுழா பகுதியில் ’த்ரிஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் மோகன்லால் மீனா மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, அரசு விதித்துள்ள நடைமுறைகளின்படி நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 25 த்ரிஷ்யம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் புரோமோ வரும் 25 ஆம் தேதி கிருஸ்துமஸ் பண்டிகையொட்டி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

#Mohanlal's #Drishyam2 First Look Teaser on Dec 25

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்