ஐம்பது கோடிகளை கடந்த மோகன்லால் படம்

புதன், 1 மார்ச் 2017 (15:18 IST)
புதிய நடிகர்கள், புதிய இயக்குனர்கள் வெள்ளமாக வந்தாலும் அதில் அடித்துப் போகாத பாறையாக இருக்கிறார் மோகன்லால். சென்ற வருடம் அவரது படங்கள்தான் மலையாளத்தில் அதிகம் வசூலித்தன.

 
மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் மலையாள சினிமாவின் அனைத்து கலெக்ஷன் சாதனைகளையும் முறியடித்தது. சென்ற வருடம்  வெளியான அவரது புலி முருகன் 100 கோடிகளைத் தாண்டி, 100 கோடிகளை வசூலித்த முதல் மலையாளப் படம் என்ற பெருமையை பெற்றது.
 
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் கண் தெரியாதவராக நடித்த ஒப்பம் படம் 50 கோடிகளை கடந்தது. அதேபோல் மோகன்லாலின் புதிய படம், முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் படமும் 50 கோடிகளை கடந்துள்ளது.
 
மலையாளத்தில் 50 கோடிகள் என்பது தமிழில் 100 கோடிகளுக்கும், இந்தியில் 300 கோடிகளுக்கும் சமம்.

வெப்துனியாவைப் படிக்கவும்