இவர்கள் சொல்லும் கட்டளைகளை நிறைவேற்றாத நாடுகளுக்கு உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதியங்கள் நிதியுதவி அளிப்பதில்லை. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த அமைப்பு அறிவிக்கும் கிரே பட்டியலில் பாகிஸ்தான் இருந்து வருகிறது. இந்தியாவில் தேடப்படும் சில பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களுக்கு அடைக்கலம் அளித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டும் பாகிஸ்தான் இந்த க்ரே பட்டியலில் நீடிக்கிறது.