நிர்கதியாக இருப்பதுபோல் உணர்கிறேன்- நடிகர் சோனு சூட் உருக்கம்

சனி, 17 ஏப்ரல் 2021 (20:08 IST)
பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் உருக்கமான ஒரு பதிவிட்டுள்ளார்.
 

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக 2 லட்சத்தை தாண்டி அதிகரித்து வருகிறது.

இதனிடையே கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவை செய்த பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரது ரசிகர்களும் அவரால் உதவி பெற்றவர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், நடிகர் சோனு சூட்  ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், இன்று காலையிலிருந்து நான் எனது செல்போனை கீழே வைக்கவில்லை. இந்தியா முழுவதிலும் இருந்து எனக்கு மருத்துவமனையில் படுக்கை, ஊசிகல் வேண்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன.

இதில் நிறைய பேருக்கு என்னால் உதவி செய்ய முடியாமல் உள்ளதால் நிர்கதியாக இருப்பதுபோல் உணர்கிறேன். எனவே நாம் அனைவரும் இணைந்து பல உயிர்களைக் காப்பாற்றலாம், அதேபோல் மருத்துவ உதவி கிடைக்காதவர்களுக்கும் நாம் உதவலாம் எனத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்