லாக்டவுனில் பிரபல இயக்குநர் படப்பிடிப்பு ?

புதன், 29 ஜூலை 2020 (16:01 IST)
தமிழ் சினிமாவில் பல புதுமுகங்களையும் புதிய திரைக்கதையும் அறிமுகம் செய்தவர் முன்னணி இயக்குநர் சுசீந்தரர். இவர் வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை,  பாண்டிய நாடு உள்ளிட்ட பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.

இவர் அடுத்தடுத்த படங்களை இயக்குவதாக இருந்தார். அவற்றின் படப்பிடிப்புகள் பாதி முடிந்த நிலையில்,  கொரொனா காலத்தில் ஹூட்டிங் முடக்கப்பட்டது.

இந்நிலையில் சுசீந்தரனின் அடுத்த படமான தடம் படத்தில் ஜெய் நடிக்கவுள்ளதாகவும், அதில் இரு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதகவும் தகவல்கள் வெளியான நிலையில்,, கிராமப் பின்னியில் உருவாகும் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் தேனி மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைதியாக படப்பிடிப்புகள் நடந்துவருவதாக தகவல் வெளியானது.

ஆனால், இயக்குநர் சுசீந்தரன் தரப்பில் தடம் படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்கவில்லை எனவும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகுதான் படப்பிடிப்பு தொடங்குமென தெரிக்கப்படுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்