அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 2015 ஆண்டு நான் ஒரு படம் எடுக்க தீர்மானித்த போது, தன் மகனை நடிகராக நடிக்கவைப்பதாகவும் அதற்கான அனைத்துப் பொறுப்புகளையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் தம்பி ராமையா என்னிடம் கூறினார். அதன்படி ஜூன் மாதம் படடத்தை ஆரம்பித்தேன். இப்படத்தை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய உத்தேசித்தேன். ஆனல் ஹீரோவாக நடித்து வந்த உமாபதியை பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. அவரும் தந்தை தம்பி ராமையாவும் சேர்ந்து என்னை நஷ்டமடைய வைக்க வேண்டுமென செயல்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.