என்ன படம் நல்லா இல்லன்னா பேமிலி ஆடியன்ஸ் தலையில கட்டுறாங்க… இணையத்தைக் கலக்கும் மீம்ஸ்!

சனி, 12 மார்ச் 2022 (15:19 IST)
சமீபகாலமாக மோசமான விமர்சனங்களை சந்திக்கும் படங்களை எல்லாம் குடும்ப பார்வையாளர்களுக்காக எடுத்ததாகக் கூறும் வழக்கம் உருவாகியுள்ளது.

சமீபகாலமாக ரிலீஸான வலிமை, எதற்கும் துணிந்தவன் மற்றும் மாறன் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. இதனால் இணையத்தில் இந்த படங்களைப் பற்றிய மீம்ஸ்கள் உருவாக்கி விடப்படுகின்றன. ஆனால் இவர்களுக்கு எதிராக மற்றொரு பக்கத்தில் இருந்து இப்படி விமர்சனங்கள் பெறும் படங்களுக்கு ஆதரவாக குரல்களும் வராமலில்லை. அவர்களின் வாதமாக இந்த படம் குடும்ப ஆடியன்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என சொல்லப்படுகிறது.


இப்போது அப்படி சொல்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மீம்ஸ்கள் உருவாக ஆரம்பித்துள்ளன. படம் நல்லா இல்லைன்னு சொன்ன ஏன் எங்க தலையில கட்ட பாக்குறீங்க என குடும்ப ஆடியன்ஸ் கேட்பது போல மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்