’வலிமை’ படத்தை எதிர்த்து ‘மெட்ரோ’ பட தயாரிப்பாளர் வழக்கு!

வெள்ளி, 11 மார்ச் 2022 (19:04 IST)
அஜித் நடித்த ’வலிமை’  திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் அந்தப் படம் மெட்ரோ படத்தின் கதை என்று கூறி மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
’வலிமை’ படத்தின் கதை போதை பொருட்களை விற்கும் கும்பலை முழுவதையும் பிடிக்கும் கதை என்பது குறிப்பிடத்தக்கது. மெட்ரோ படத்தின் கதை செயின் பறிக்கும் கும்பலை பிடிக்கும் கதை என்பது குறிப்பிடதக்கது 
 
மெட்ரோ படத்தின் கதை மற்றும் கேரக்டர்கள்தான் வலிமை படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் வழக்கு பதிவு செய்துள்ளார்
 
இந்த மனு குறித்து பதிலளிக்குமாறு ’வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் வினோத் ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்