ஷங்கர் படத்தில் பஹத் பாசில் & ஜெயராம்!

சனி, 28 ஆகஸ்ட் 2021 (16:49 IST)
நடிகர் பஹத் பாசில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இந்நிலையில் கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லைகா உடனான பிரச்சனைகளை முடித்துவிட்டு ஷங்கர் ராம்சரண் தேஜாவின் படத்தை தற்போது தொடங்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் பட்டியல் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்னர்  ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஜெகபதி பாபு ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது பஹத் பாசில் மற்றும் ஜெயராம் ஆகியோரும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்