தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ்பாபு விளம்பர தூதராக இருக்கும் சொர்ணா குரூப்ஸ் மற்றும் சாய் சூர்யா டெவெலப்பர்ஸ் கட்டுமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனைக்கு பின்னர், இந்த நிறுவனங்களின் விளம்பர தூதரான மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அந்த நோட்டீஸில், ஏப்ரல் 27ஆம் தேதி நடிகர் மகேஷ்பாபு, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பண மோசடிகளில் ஈடுபட்டதாகவும், ஒரே இடத்தை பலரிடம் விற்பனை செய்துள்ளதாகவும், ஒப்புக்கொண்டபடி வீடுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த நிறுவனத்தின் விளம்பர தூதர் மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதால், அவருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தெலுங்கு திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.