பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாகும் ஹீரோ நடிகர்!

புதன், 5 ஜனவரி 2022 (09:33 IST)
பாலகிருஷ்ணா அடுத்து நடிக்கும் படத்தில் கன்னட நடிகர் துனியா விஜய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கு நடிகர் என் டி ஆரின் மகனான பாலகிருஷ்ணா 60 வயதுக்கு மேலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். பெரும்பாலான அவரின் படங்கள் தோல்வி அடைந்து கேலி செய்யப்படாலும், அவர் நடிப்பதை விட்ட பாடில்லை. இந்நிலையில் இப்போது அவர் சிவபக்தராக அஹோரியாக நடித்துள்ள அகாண்டா படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதையடுத்து இப்போது அவர் அடுத்து நடிக்கும் படத்தின் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதியை அனுகியது படக்குழு. ஆனால் அவர் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போகவே இப்போது கன்னட நடிகரான துனியா விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்