பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கும் படத்தின் பூஜை!

சனி, 13 நவம்பர் 2021 (16:50 IST)
நடிகர் பாலகிருஷ்ணா அடுத்து நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். ஏற்கனவே சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு இப்போது தொடங்கியுள்ளது. பூஜையில் படத்தின் நாயகன் பாலகிருஷ்ணாவும் ஸ்ருதிஹாசனும் கலந்துகொண்டனர். இது சம்மந்தமான புகைப்படத்தை படக்குழு இணையத்த்தில் வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்