குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸில் கதாநாயகன் போலீசாரிடம் சிக்காமல் தப்பிப்ப்து தான் இந்த படத்தின் ஹைலைட் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரே ஒரு ரீமேக் இயக்குனர் மட்டும் இறுதியில் கதாநாயகன் போலீசாரிடம் சரண் அடைவது போல் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படமும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இவ்வாறு கிளைமாக்ஸை மாற்றிய ஒரே இயக்குனர் யார் என்றால் சீனாவின் சாம்குவா என்பவர்தான். ஆம், சாம்குவா திரைப்படம் சமீபத்தில் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தின் கிளைமாக்ஸில் நாயகன் போலீசாரிடம் சரண் அடைவது போன்று படத்தை சாம்குவா முடித்துள்ளார். சீனாவை பொறுத்தவரை குற்றம் செய்தவர் தண்டனை அனுபவிக்காமல் தப்பிப்பது போல் உள்ள படத்தை சென்சார் அனுமதிக்காது என்பதால் அவர் கிளைமாக்சை மாற்றியதாக கூறப்படுகிறது.