’த்ரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக்கில் நாயகி இவர்தான்!

திங்கள், 22 பிப்ரவரி 2021 (08:23 IST)
சமீபத்தில் வெளியான மோகன்லாலின் த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு இந்த படத்திற்கு ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் 
 
மேலும் இந்த படம் ஓடிடியில் வெளியானாலும் மிகப்பெரிய வசூலை குவித்து வருவதாகவும், உலக அளவில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன 
’த்ரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக்கில் நாயகி இவர்தான்!
இந்த நிலையில் திரிஷ்யம் படத்தை போலவே ’த்ரிஷ்யம் 2’ படத்தையும் கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதன் பணிகளும் தொடங்கிவிட்டன 
 
இந்த நிலையில் தற்போது ’த்ரிஷ்யம் 2’ படத்தின் நாயகி கேரக்டரான மீனா கேரக்டரில் தெலுங்கிலும் மீனா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மார்ச் 1ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்