மிகப்பெரிய தொகைக்கு விலைபோன ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் சாட்டிலைட் உரிமை!

வியாழன், 22 டிசம்பர் 2022 (12:54 IST)
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தி கிரேட் இந்தியன் கிட்சென் என்ற திரைப்படம் வரும் 29ஆம் தேதியும், டிரைவர் ஜமுனா என்ற திரைப்படம் 30ஆம் தேதியும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 ஒரு பிரபல நடிகையின் திரைப்படம் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி திரையரங்கு வெளியீட்டிற்கு பின்னர் டிரைவர் ஜமுனா திரைப்படத்தை சாட்டிலைட்டில் ஒளிபரப்ப மிகப்பெரிய தொகை கைமாறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி வாங்கியுள்ளதாகவும், திரையரங்குகளில் ரிலீஸான ஒரே மாதத்தில் இந்த படத்தை கலைஞர் டிவியில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
டிரைவர் ஜமுனா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இன்றி நடித்து உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்