இரக்கமுள்ள சர்வாதிகாரம் வேண்டாம்: நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவு

புதன், 25 அக்டோபர் 2017 (10:36 IST)
நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசியலில் சூட்டை கிளப்பி வருகிறார். அவ்வப்போது தனது ட்விட்டர் பதிவுகள் தனது கருத்தை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு டிவிட்டுகளை பதிவிட்டுள்ளார்.

 
அதில், சிங்கப்பூரில் தினமும் நள்ளிரவில் தேசியகீதம் இசைக்கப்படுவதுபோல் நமது நாட்டிலும் தூர்தர்ஷனில் பின்பற்றலாம். வெவ்வேறு இடங்களில் எனது நாட்டுப்பற்றை நிரூபிக்க பரிசோதிக்கவோ, கட்டாயப்படுத்தவோ வேண்டாம் என்று பதிவிட்டிருந்தார்.

 
மற்றொரு பதிவில் சில விவாதங்களின்படி, சிங்கப்பூரில் ஒர் இரக்கமுள்ள சர்வாதிகாரம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நாம் அதை விரும்புகிறோமா? என்று கேட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் தயவு செய்து வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்