கமல், ரஜினி கட்சியில் சேர மாட்டேன்: சத்யராஜ் மகள் அதிரடி அறிவிப்பு

திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (08:11 IST)
பிரபல நடிகர் சத்யராஜின் மகள் விரைவில் அரசியல் கட்சி ஒன்றில் சேரப் போவதாகவும் ஆனால் அதே நேரத்தில் கமல், ரஜினி கட்சியில் சேர மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’மகிழ்மதி இயக்கம்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்த சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், இந்த இயக்கத்தின் மூலம் ஊட்டச்சத்து குறைந்த மாணவர்களுக்கு ஊட்டச்சத்து அளித்து வருவதாக தெரிவித்தார். மேலும் இந்த கொரோனா காலத்தில் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இந்த இயக்கம் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார் 
 
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த திவ்யா சத்யராஜ் தான் ஒரு அரசியல் கட்சியில் சேரப்போவதாக தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் ஜாதி மதம் சார்ந்த கட்சியில் சேர மாட்டேன் என்றும், ரஜினி கமல் கட்சியிலும் சேர மாட்டேன் என்று கூறியுள்ளார்
 
தனக்கு பிடித்த தலைவர் எம்ஜிஆர் மற்றும் நல்லகண்ணு என்று அவர் கூறியதால் அவர் அதிமுக அல்லது கம்யூனிஸ்ட் கட்சியில் சேரலாம் என்றும் குறிப்பாக திவ்யா சத்யராஜ் அடிக்கடி அமைச்சர்களை சந்தித்து வருவதால் அவர் அதிமுகவில் சேர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுஇறது
 
எந்த கட்சியில் சேர்ந்தாலும் அப்பாவின் ஆதரவு தனக்கு கண்டிப்பாக இருக்கும் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். திவ்யா சத்யராஜ் விரைவில் அதிமுகவில் சேருவாரா என்பதை என்பதை பொருத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்