வாரிசு இயக்குனர் வம்சி என்ன ஆனார்? அவரின் அடுத்த பட ஹீரோ இவரா?

vinoth

சனி, 27 ஏப்ரல் 2024 (08:48 IST)
கடந்த ஆண்டு விஜய், ராஷ்மிகா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரை வைத்து இயக்குனர் வம்சி வாரிசு படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கடந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக அமைந்தது. ஆனால் ரசிகர்கள் இயக்குனர் வம்சியை ட்ரோல் மெட்டீரியல் ஆக்கினர்.

இந்நிலையில் வாரிசு திரைப்படம் வெளியாகி 1 ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் தன்னுடைய அடுத்த படத்தை வம்சி அறிவிக்கவில்லை. இந்நிலையில் அவர் அடுத்து இந்தியில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் பரவின.அவர் இயக்கும் அந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த தகவலை வம்சி மறுத்துள்ளார்.

தன்னுடைய அடுத்த படம் என்ன என்பதை விரைவில் அதிகாரப் பூர்வமாக அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்