அப்படி ஒரு நேர்காணலில் இயக்குனர் ராகேஷ் கூறும்போது “வழக்கமாக ராமராஜன் திரைப்படத்தில் உள்ளது போல இதில் பாடல்கள் கிடையாது, கதாநாயகி கிடையாது என்பதையெல்லாம் ராமராஜன் ஏற்றுக்கொண்டார். ஆனால் கலர் கலரான உடை அணியக்கூடாது என்பதை மட்டும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
முதல் நாள் படப்பிடிப்புக்கே கலர் உடையில்தான் வந்தார். நான் அவரிடம் இந்த படத்தில் கண்ணை கவரும் வண்ண ஆடைகள் எல்லாம் நீங்கள் உடுத்த போவதில்லை என கூறினேன். ஆனாலும் ஒரு வருடமாக என்னிடம் மீண்டும் மீண்டும் அவர் கேட்டு வந்ததால் கே.எஸ் ரவிக்குமாருடன் இறுதி காட்சி வரும். அதில் ராமராஜனை வண்ண உடையில் வரவழைத்துள்ளேன். ஒரு வருட போராட்டத்தில் கடைசியில் நான் அவர்கிட்ட தோத்துட்டேன்” என்கிறார் இயக்குனர் ராகேஷ்.