ராஜுமுருகன் தயாரிக்கும் பராரி படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட்!

vinoth

செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (14:30 IST)
'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி', 'ஜப்பான்' போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் 'பராரி'. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட படத்தின் முதல் லுக் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜு முருகனிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இப்படத்தை இயக்கியுள்ளார்.

திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் அந்த நிலத்தின் எளிய மக்களின்  வாழ்க்கை முறையையும் அவர்களுக்கான அரசியலையும் 'பராரி' பேசுவதாக படக்குழுவினரால் சொல்லப்பட்டுள்ளது. படத்தில் ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, பரியேரும் பெருமாள் படத்திற்க்கு ஒளிப்பதிவு செய்த ஸ்ரீதர்  ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்