ஆனால், ஆர்.பி.செளத்ரி அந்தப் படத்துக்குத் தயாரிப்பாளரான பிறகு, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்று பெயரை மாற்றினர். அந்த தலைப்பை பதிவுசெய்யச் சென்றால், ஏற்கெனவே அதை இயக்குநர் சேரன் பதிவுசெய்து வைத்திருந்தார். அவரிடம் தலைப்பைத் தருமாறு லிங்குசாமி கேட்டபோது, அவர் தரமறுத்து விட்டாராம். இதனால், அந்தப் பெயரில் உள்ள முதல் வார்த்தையை மட்டும் கொண்டு, ‘ஆனந்தம்’ எனப் பெயர் வைத்தார் லிங்குசாமி.