விழாவில் பேசிய அவர் ‘தமிழ் சினிமாவில் இருந்து வந்த கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழ் சினிமாவுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளனர். பிலிம் சிட்டி கலைஞர் ஆட்சிக் காலத்தில் உருவானாலும் அதற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டது. ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு அதற்கு தனது பெயரை சூட்டினார். அது தவறானது. அப்போது சினிமா பிரபலங்கள் யாரும் இதுபற்றி குரல் கொடுக்கவில்லை. அதனால் அடுத்த முறை ஆட்சிக்கு வந்த கலைஞர் அந்த இடத்தை டைடல் பார்க் கட்ட கொடுத்து விட்டார். இப்போது பிலிம் சிட்டி சிறிய இடமாக உள்ளது. இவர்களை சுற்றி இருந்தவர்கள் தங்களுக்கு நல்லது செய்து கொண்டார்கள். ஆனால் தமிழ் சினிமாவுக்கு நல்லது செய்யவில்லை.
தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் அரசிடம் இருந்து எல்லா நன்மைகளையும் பெற்றுக்கொண்டு அரசியலுக்கு வருகிறார்கள். டிவீட் செய்கிறார்கள். அந்த அச்சத்தால்தான் அரசு கொடுக்கும் விருதுகள் நிறுத்தி வைக்கப்படுவதாக நான் நினைக்கிறேன். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அச்சப்பட தேவையில்லை. ஏனன்றால் அவர் எந்த பால் போட்டாலும் திருப்பி அடிக்கிறார்.’ எனப் பேசியுள்ளார்.