இயக்குனராகும் வசனகர்த்தா: ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நாயகி!

வியாழன், 29 ஏப்ரல் 2021 (21:48 IST)
தமிழ் திரையுலகில் ஏற்கனவே ஒரு சில வசனகர்த்தாக்கள் இயக்குனர்களாக மாறி உள்ளனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு வசனகர்த்தா இயக்குனராக உள்ளார் 
 
ஜெயம் ரவி நடித்த அடங்கமறு விஜய் சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்களுக்கு வசன கர்த்தாவாக இருந்தவர் சண்முகம் முத்துசாமி. இவர் தற்போது ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் 
 
கேஆர்ஜே ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஒரு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்றும் எனவே இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே கனா உட்பட ஒரு சில நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த உள்ளதால் இந்த படத்தில் அவர் நடிப்பது தான் பொருத்தமாக இருக்கும் என இயக்குனர் சண்முகம் முத்துசாமி அவரை தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்