‘பைசன்’தான் எனக்கு முதல் படம்… துருவ் விக்ரம் நெகிழ்ச்சி!

vinoth

திங்கள், 6 அக்டோபர் 2025 (13:22 IST)
ஆதித்யா வர்மா மற்றும் மகான் ஆகிய படங்களைத் தொடர்ந்து துருவ் விக்ரம் தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக மாரி செல்வராஜோடு கூட்டணி அமைத்துள்ளார் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா.

 பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளது. படத்தில் இருந்து வெளியானப் பாடல்கள் இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

படம் பற்றி பேசியுள்ள துருவ் விக்ரம் “என்னுடைய முதல் இரண்டு படங்களையும் ரசிகர்கள் பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை. பைசன்தான் எனக்கு முதல் படம் என்று நினைத்துப் பாருங்கள். நானும் அப்படி நினைத்துதான் இந்த படத்தில் நடித்துள்ளேன்.  என்னுடைய நூறு சதவீத உழைப்பை இந்த படத்துக்குக் கொடுத்துள்ளேன். மாரி செல்வராஜும் கஷ்டப்பட்டு உழைத்து ஒரு சம்பவம் செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்