தல தோனி தயாரிக்க்கும் முதல் திரைப்படம்: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்..!

திங்கள், 10 ஏப்ரல் 2023 (22:05 IST)
தல தோனி தயாரிக்கும் முதல் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
கிரிக்கெட் உலகில் பல சாதனைகள் செய்த தல தோனி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். 
இந்த நிலையில் தல தோனி சமீபத்தில் தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து தமிழ் படம் ஒன்றை தயாரித்து வருகிறார். எல்.ஜி.எம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா நதியா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தல தோனி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். எல்ஜிஎம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் இந்த திரைப்படத்தை பார்க்க தயாராகுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Edited by Siva

 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்