தோனி தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தமிழ்ப் படம்… இன்று வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

திங்கள், 10 ஏப்ரல் 2023 (07:59 IST)
பிரபல கிரிக்கெட் வீரர் தோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்பதும் அந்த நிறுவனத்தின் பெயர் தோனி என்டர்டைன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்பதும் தெரிந்ததே. இந்த நிறுவனத்தின் சார்பில் தோனியின் மனைவி சாக்சி தோனி தமிழ் படம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த படத்தின் டைட்டில் சற்று முன் அறிவிக்கப்பட்டது. 

எல்ஜிஎம் (LetsGetMarried) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு உட்படப்பாளர் நடிக்க உள்ளனர். இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கி வருகிறார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhoni Entertainment Pvt Ltd (@dhoni.entertainment)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்