இந்த போட்டியில் சி எஸ் கே பவுலர்கள் ஏராளமான வொய்ட் மற்றும் நோ பால்களை வீசினர். முதல் போட்டியிலும் இதுபோல தவறுகளை செய்தனர். இதுபற்றி போட்டி முடிந்ததும் பேசிய கேப்டன் தோனி நான் ஏற்கனவே இதுபற்றி எச்சரிக்கை செய்தேன். இப்போது இரண்டாவது முறையாகவும் சொல்கிறேன். அவர்கள் நோபால் மற்றும் வொய்ட் வீசுவதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் வேறு கேப்டனோடுதான் விளையாட வேண்டி இருக்கும்” என எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.