தல தோனியின் ‘எல்ஜிஎம்’ : அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

வியாழன், 20 ஜூலை 2023 (15:12 IST)
தல தோனி சமீபத்தில் தோனி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்பதும் இந்த நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் முதல் படம் ‘எல்ஜிஎம்’ என்ற தமிழ் படம் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடந்த போது தோனி மற்றும் அவரது மனைவி சாக்சி சென்னைக்கு வருகை தந்திருந்தனர் 
இந்த நிலையில் ‘எல்ஜிஎம்’  திரைப்படம் வரும் ஜூலை 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் செய்தியுடன் கூடிய போஸ்டர் வெளியாகி உள்ளது 
 
இந்த படத்தின் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ள நிலையில் முக்கிய கேரக்டர்களில் நதியா, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ்மணி இயக்கி இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்