ஏ ஆர் ரஹ்மான் இசையில் மீண்டும் பாடும் தனுஷ் – டிவிட்டரில் வெளியிட்ட புகைப்படம்!

வெள்ளி, 30 அக்டோபர் 2020 (10:46 IST)
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார்.

ராஞ்சனா என்ற படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  அதன் பின்னர் அவர் ஷமிதாப் என்ற படத்தில் அமிதாப்புடன் இணைந்து நடித்தார். அந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து பாலிவுட்டுக்கு ஒரு இடைவெளி விட்டார் தனுஷ். இந்நிலையில் சில வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கிறார் தனுஷ்.

இந்த படத்தை அவரது முதல் படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். இந்த படத்தில்  தனுஷுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் அக்‌ஷ்ய் குமார் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் நடைபெற்றது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ள நிலையில் அதில் ஒரு பாடலை பாடியுள்ளாராம் தனுஷ்.

இது சம்மந்தமான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தனுஷ். ஏற்கனவே மரியான் படத்தில் ரஹ்மான் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார் தனுஷ்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்